வரலாற்று திரிபுகள் நாட்டினை சூழ்ந்துள்ள ஆபத்து : முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
சென்னையில் நடைபெற்ற இந்திய வரலாற்று பேரவையின் 81 வது மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மதவாத கட்சியாக ஒரு கட்சி செயல்படுவதை அனுமதிக்க முடியாது எனக் கூறினார்.
பழம் பெருமை பற்று
மதசார்பற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு அனைவரும் பாடுபடவேண்டும், நாங்கல் பழம் பெருமைகள் மீது பற்று உள்ளவர்கள்தான் ஆனால் ,பழமைவாதிகள் அல்ல , அறிவியல் பூர்வமான ஆதாரஙகள் அடிப்படையில் தான் பழம்பெருமைகளை பேசுவதாக முதலமைச்சர் கூறினார். அதே சமயம் சிறந்த அறிவியல் பூர்வ வரலாற்று பார்வையினை உருவாக்குவதுதான் இன்றைய காலத்தின் அவசியம்.
வரலாற்று திரிபு ஆபத்து
மேலும், பொய் வரலாறுகளை புறந்தள்ளி மக்களை மையப்படுத்தி வரலாறுகள் எழுத வேண்டும் , வரலாற்று திரிபுகள் நாட்டினை சூழ்ந்துள்ள ஆபத்து என்று கூறிய முதலமைச்சர்
#LIVE: Indian History Congress-இன் 81-ஆவது மாநாட்டைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை https://t.co/Af5cr112JD
— M.K.Stalin (@mkstalin) December 27, 2022
கீழடியில் மிகப் பெரிய அருங்காட்சியகம் திறக்கப்பட உள்ளதாகவும் , உண்மையான வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்களது கடமை என்று கூறினார்.