உங்களை பார்த்துக்கொள்ளுங்கள்; சிறையில் நானும்.. - திகாருக்கு புறப்பட்டார் கெஜ்ரிவால்!

Delhi India Arvind Kejriwal Lok Sabha Election 2024
By Jiyath Jun 02, 2024 10:15 AM GMT
Report

திகார் சிறையில் சரணடைய புறப்பட்டார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

அரவிந்த் கெஜ்ரிவால் 

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

உங்களை பார்த்துக்கொள்ளுங்கள்; சிறையில் நானும்.. - திகாருக்கு புறப்பட்டார் கெஜ்ரிவால்! | Chief Minister Arvind Kejriwal Left For Tihar Jail

இதனிடையே அவருக்கு 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் நாடாளுமன்ற தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு முடிந்த அத்த நாள் சிறையில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தனது உடல்நிலையைக் காரணம் காட்டி இடைக்கால ஜாமீனை நீட்டிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை மனு தாக்கல் செய்தார்.

ஆனால், கெஜ்ரிவாலின் மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே குறிப்பிட்ட ஜூன் 2-ம் தேதி சிறையில் சரணடையுமாறு உத்தரவிட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் இறுதிகட்ட வாக்குப்பதிவு நேற்றோடு முடிவடைந்த நிலையில், இன்று திகார் சிறையில் சரணடைய புறப்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்.

அமைச்சர் சொல்லி கொடுப்பதை பேசி மக்களை ஏமாற்றுகிறார் பிரகாஷ் ராஜ் - ஜெயக்குமார் கண்டனம்

அமைச்சர் சொல்லி கொடுப்பதை பேசி மக்களை ஏமாற்றுகிறார் பிரகாஷ் ராஜ் - ஜெயக்குமார் கண்டனம்

மகிழ்ச்சியாக இருப்பேன்

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் 21 நாள்கள் தேர்தல் பிரசாரத்துக்காக வெளியில் வந்தேன். இன்று திகார் சிறையில் சரணடைகிறேன்.

உங்களை பார்த்துக்கொள்ளுங்கள்; சிறையில் நானும்.. - திகாருக்கு புறப்பட்டார் கெஜ்ரிவால்! | Chief Minister Arvind Kejriwal Left For Tihar Jail

சரியாக 3 மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பி முதலாவதாக ராஜ்காட் சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துவேன். பின்னர், கன்னாட் பிளேஸிலுள்ள ஹனுமன் கோவிலுக்கு சென்று ஹனுமனின் ஆசீர்வாதம் பெற்றுவிட்டு, அங்கிருந்து கட்சி அலுவலகத்துக்கு சென்று அனைத்து தொண்டர்களையும் கட்சித் தலைவர்களையும் சந்திப்பேன். 

அதைத்தொடர்ந்து திகாருக்கு செல்வேன். நீங்கள் அனைவரும் உங்களை பார்த்துக்கொள்ளுங்கள். சிறையிலிருந்து நானும் உங்களை பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் சிறையில் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார். அதன்படி, காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறைக்கு புறப்பட்டார்.