வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா - பி.எஸ். ராமன் பதவியேற்பு!

Tamil nadu Government of Tamil Nadu DMK
By Sumathi Jan 11, 2024 06:24 AM GMT
Report

பி.எஸ். ராமன் இன்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பதவியேற்றார்.

அரசு தலைமை வழக்கறிஞர்

தமிழ்நாட்டு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா செய்துள்ளார். இவர் 1977 இல் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். திமுக ஆட்சியில் 1989-1991 இல் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகவும்,

advocate ps-raman

1996-2001 இல் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராகவும், திமுக கட்சி சார்பாக இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு உறுப்பினராகவும் 2002-2008 இருந்தார்.

திடீரென ராஜினாமா செய்த அரசு தலைமை வழக்கறிஞர் - என்ன காரணம்?

திடீரென ராஜினாமா செய்த அரசு தலைமை வழக்கறிஞர் - என்ன காரணம்?

பி.எஸ். ராமன்

இதனை தொடர்ந்து 2021 இல் திமுக அரசு பொறுப்பேற்றதும் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காகத் தனது அரசு தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா - பி.எஸ். ராமன் பதவியேற்பு! | Chief Advocate Of Tn Govt Ps Raman Sworn

மேலும் தனித்த முறையில் வழக்கறிஞராக இயங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போது. தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் பதவிக்கு மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமனை பரிந்துரை செய்துள்ளனர். மேலும் இவர் 2009 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியின் போது தலைமை வழக்கறிஞராகப் பதவியிலிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலை மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன் தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக பதவியேற்றார்.