சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு..!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கணக்குகளை ஆய்வு செய்யும் பணியை அறநிலையத்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
அதிகாரிகள் ஆய்வு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். 2014 ஆம் ஆண்டு முதல் கோவிலின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்வதற்காக,
இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழுவினர் இன்று ஆய்வு மேற்கொள்ள சென்றனர்.
இதையடுத்து கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் குறித்தான விவரங்கள், அவற்றுக்கான தொல்லியல்துறை கருத்துரு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி விவரம், மதிப்பீடு விவரங்களும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு சென்ற நிலையில் கோயில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் அமர்ந்துள்ளனர்.
சட்டப்படி நடவடிக்கை
அறநிலையத்துறை அதிகாரிகள். இதுகுறித்து தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தான் நேரடியாக கோயிலுக்கு சென்று தீட்சிதர்களுடன் தரையில் அமர்ந்து பேசினேன்.
அப்போது கோயில் குறித்து புகார்கள் வந்ததை அடுத்து தான் இந்த ஆய்வு,எங்களுக்கு கோவிலை எடுக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என தெரிவித்ததாக கூறினார்.
மடியில் கணம் இல்லை என்றார் வழியிலே பயம் இல்லை என்று இருப்பதை சொல்லிவிட்டு செல்வது தான் முறை என்றார்.
தீட்சிதர்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்தால் சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.