அண்ணாமலை யாருக்கும் பல்லக்கு துாக்கக் கூடாது..நியாயத்திற்கு பல்லக்கு துாக்க வேண்டும் - அமைச்சர் சேகர் பாபு..!
அண்ணாமலை யாருக்கும் பல்லக்கு துாக்கக் கூடாது,நியாயத்திற்கு பல்லக்கு துாக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் ,அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் மண்டல இணை ஆணையர்களுக்கு வாக்கி டாக்கிகளை அமைச்சர் சேகர் பாபு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதினத்திற்கு பல்லக்கு துாக்குவதை விட்டுவிட்டு நியாயத்திற்கு பல்லக்கு துாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் தருமபுர பட்டின பிரவேசம் குறித்து முதல்வர் அனைவருக்கும் உகந்த நல்ல முடிவை எடுப்பார் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் திருச்செந்துாரில் சாமி தரிசனத்துக்கு ரூ.1000 ஆயிரம் பெறப்பட்ட சம்பவம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்,
இச்சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் கையகப்படுத்த வேண்டும் என்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர் தனிச்சட்டம் இயற்றுவது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.