"இரு விரல் பரிசோதனை செய்யப்படவில்லை" - ஆளுநர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுப்பு
ஆளுநர் ஆர்.என்.ரவி வைத்த குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.
ஆளுநரின் குற்றச்சாட்டு
சமீபத்தில், ஆளுநர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பெட்டியில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிகர்கள் குழந்தைத் திருமணங்கள் நடப்பதாக 8 பேர் மீது புகார் அளித்தார். இதனால், 'இரு விரல் பரிசோதனை' என்னும் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து மா.சுப்பிரமணியன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் பேட்டி அளித்துள்ளார்.
அமைச்சர் பேட்டி
இதனை தொடர்ந்து, அவர் அளித்த பெட்டியில், " அண்மையில் தமிழக ஆளுநர், பல்வேறு துறைகளில் தன்னுடைய பூத கண்ணாடியை வைத்து குறைகளை தேடி வருகின்றார். தமிழக அரசின் மீது குறைகளை சொல்ல வேண்டும் என்பதற்காகவே, தேடி தேடி புகார் அளிக்கின்றனர்.
அந்தவகையில் அவர் கூறிய சிதம்பரம் தீட்சிகர்கள் குழந்தை புகாரில், அந்தச் சிறுமிக்கு இரு விரல் பரிசோதனை நடந்ததாக சொல்லியிருக்கிறார். இதுகுறித்து மருத்துவ அலுவலர்கள் விசாரித்ததில், சிறுமிக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனை படிவமும் ஆய்வு செய்யப்பட்டது.
அப்படிவத்தில் மிகத் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது, இரு விரல் பரிசோதனை அச்சிறுமிக்கு செய்யவில்லை என்றும். எனவே, ஆளுநரால் அரசின் மீது வைத்திருக்கும் இந்தக் குற்றச்சாட்டு, நான் ஏற்கெனவே சொல்லியதுபோல் பூதக்கண்ணாடி வைத்து தேடினாலும் அவருக்கு ஆதாரத்துடன் கூடிய குற்றச்சாட்டு கிடைக்கவில்லை. அதனால், இக்குற்றச்சாட்டு ஆதாரபூர்வமாக மறுக்கப்பட்டிருக்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.