பிரியாணி பார்சல் வாங்கிய பெண்.. உள்ளே கிடந்த தலை - மிரண்டுபோன கஸ்டமர்!
பெண் ஒருவர் வாங்கிய பிரியாணியில் தலை கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பார்சல்
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் ஏலூர் பகுதியை சேர்ந்தவர் பிரதிபா. இவர் முத்தூரில் உள்ள பரோட்டா கடையில் 4 பிரியாணி பார்சல்கள் வாங்கியுள்ளார். அவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடுவதற்காக வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார்.

அவர்கள் சாப்பிடுவதற்காக பிரியாணி பார்சாலை ஓபன் செய்தபோது அதில் ஒரு பார்சலில் பிரியாணிக்குள் கோழியின் முழு தலை கிடந்தது. இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
ஹோட்டலுக்கு சீல்
இந்நிலையில், அவர் பிரியாணிக்குள் கோழி தலை கிடந்தது குறித்து திரூர் நகராட்சியின் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஓட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

பின்னர், அந்த ஹோட்டலை இழுத்து மூடி சீல் வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்...! அநுர தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து IBC Tamil