பன்றி ரத்தம் குடிச்சாதான் கல்யாணமாம்; மாமனாரை வேற இம்ப்ரெஸ் பண்ணனுமாம் - விநோத சடங்கு!
பழங்குடியினரின் விநோத சடங்கு பலரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளது.
திருமணம்
மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் கோண்ட் இன பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தான் உலகின் மிகவும் பழமையான பழங்குடியினராக இன்றும் கருதப்படுகின்றனர்.
பெரும்பாலும் வேட்டையாடுவதன் மூலம் வாழ்கின்றனர். உணவில் இறைச்சிக்கும் மீனுக்கும் முக்கிய இடமுண்டு. பெண்கள் சேலையும், ஆண்கள் வேட்டி, கஞ்சியும் அணிகிறார்கள்.
விநோத சடங்கு
பாரம்பரியத்தை முழு மனதோடு பின்பற்றிவருகின்றனர். அதன்படி, பெண்ணை ஆண் காதலித்து திருமணம் செய்துகொள்ள விரும்பும் பட்சத்தில் முதலில் அந்த மணமகன் மாமனாரை இம்ப்ரெஸ் செய்ய வேண்டும். மாமனாருக்கு சொந்தமான நிலத்தில் இறங்கி வேலைசெய்ய வேண்டும்.
மேலும், பன்றியின் பச்சை ரத்தத்தை குடிக்க வேண்டும். இதிலெல்லாம் ஜெயித்தால் மட்டுமே திருமணமாம். இல்லையென்றால் அந்த திருமணம் நடக்காது என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.