ஒரு செல்போனுக்காக ஏரியிலிருந்து 21 லட்சம் லிட்டர் நீரை வெளியேற்றிய அதிகாரி - பகீர்!

Chhattisgarh
By Sumathi May 27, 2023 04:30 AM GMT
Report

செல்போனுக்காக ஒரு நீர்தேக்கத்தின் ஒட்டுமொத்த தண்ணீரை அரசு அதிகாரி வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவறி விழுந்த மொபைல்

சத்தீஸ்கர், கொய்லிபேடா பகுதியின் உணவுத்துறையில் ஆய்வாளராக பொறுப்பு வகித்தவர் ராஜேஷ் விஸ்வாஸ். இவர்விடுமுறை எடுத்து அருகே கேர்கட்டா என்ற நீர்தேக்கத்திற்கு சுற்றி பார்க்க சென்றுள்ளார்.

ஒரு செல்போனுக்காக ஏரியிலிருந்து 21 லட்சம் லிட்டர் நீரை வெளியேற்றிய அதிகாரி - பகீர்! | Chhattisgarh Officer Out Water Reservoir For Phone

அதனை தனது ஸ்மார்ட் போனில் செல்பி எடுக்கத் தொடங்கியுள்ளார். அப்போது அவரது செல்போன் நீர் தேக்கத்திற்குள் விழுந்துள்ளது. ஒரு லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட்போன் தண்ணீருக்குள் விழுந்ததையடுத்து, அங்கிருந்தவர்களை தேடித் தரக் கூறியுள்ளார்.

அதிகார துஷ்பிரயோகம்

15 அடி ஆழ நீர்தேக்கத்திற்குள் விழுந்த போனை அங்கிருந்தவர்கள் தேடி பார்க்க முயற்சித்ததில் கிடைக்கவில்லை. அதனையடுத்து, அவர் இரண்டு 30HP மோட்டார்களை வரவழைத்து தொடர்ந்து மூன்று நாள்கள் அவற்றை ஓட வைத்து 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றியுள்ளார்.

ஒரு செல்போனுக்காக ஏரியிலிருந்து 21 லட்சம் லிட்டர் நீரை வெளியேற்றிய அதிகாரி - பகீர்! | Chhattisgarh Officer Out Water Reservoir For Phone

இதற்கிடையில், நீர் மேலான்மை அதிகாரிகளின் கவனத்திற்கு சென்று இந்த செயலை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதற்குள்ளாக நீர் மட்டம் வெறும் 6 அடியாக குறைந்துள்ளது. இதற்கு முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ரமன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிகாரி ராஜேஷை உடனடியாக சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா சுக்லா உத்தரவிட்டுள்ளார்.