அரசு பணியில் விஜய் டிவி ராமர் - யாருக்காவது தெரியுமா அவர் அரசு அதிகாரி என்று..!
விஜய் டிவி புகழ் ஒரு கிராம நிர்வாக அலுவலர் என்பது எத்தனை பேருக்கு தெரியும் அவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை எம்.பி வெங்கடேசன் பதிவிட்டு அவர் ஒரு வி.ஏ.ஓ என்றும் தெரிவித்துள்ளார்.
‘ஆத்தாடி என்ன உடம்பி’ என்ற அழகான வார்த்தையை நமக்கு அறிமுகம் செய்து, அதை ஹிட்டடிக்கவும் வைத்தவர் ராமர்.
‘என்னமா இப்படி பண்றீங்களேமா’ என்ற டயலாக் இவரது டிரேட் மார்க்காக இருந்த காலம் போய், இன்று ராமர் என்று சொன்னாலே யாரென்று தெரியும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.
ராமரின் சொந்த ஊர், மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகிலுள்ள அரிட்டாபட்டியாகும். சின்ன வயசுல இருந்தே நம்ம ஹீரோவுக்கு நடிப்பு மேல் பயங்கர ஆர்வம்.
ஸ்கூல், காலேஜ் என்று அனைத்திலும் ஒரு ரவுண்டு வந்தவர், அவரது மாமாவுடன் சேர்ந்து ஆர்.டி.ஓ ஆபீஸில் தற்காலிக வேலை செய்து வந்திருக்கிறார்.
இருந்தாலும், அவ்வப்போது உள்ளூர், வெளியூர் என்று சின்னச் சின்ன நிகழ்ச்சிகள் மூலமாக தன் திறமையை வெளிக்காட்டிக் கொண்டே இருந்தார்.
ராமர் கல்லுாரி விரிவுரையாளரான கிருஷ்ணவேனியை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரண்டு பெண்,ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் எம்.பி வெங்கடேசன் தனது முகநுால் பதிவில் கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின் போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் விஜய்டிவி புகழ் ராமர் அவர்களை சந்திதேன் என்று புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்த பதிவு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராமர் ஒரு கலைஞர் என்று பார்த்து வந்த அவரது ரசிகர்கள் தற்போது அவர் வி.ஏ.ஓ என்று கேட்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.