இதயத்தை கிழித்து எடுத்த கொடூரம்; செய்தியாளர் கொலை - பகீர் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்!
பத்திரிக்கையாளர் கொலை வழக்கில் பிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது.
பத்திரிக்கையாளர் கொலை
சத்தீஸ்கரைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் முகேஷ் சந்திரகர்(28). இவர் அங்குப் பழங்குடியினர் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்துப் பல செய்திகளை வெளியிட்டு வந்தார்.
கடந்த 2021ல் மாவோயிஸ்ட்டுகள் சிஆர்பிஎப் கமாண்டோ ராகேஷ்வர் சிங்கை பிடித்து வைத்திருந்த நிலையில், அவரை மீட்டு வந்த முக்கிய பங்கு இவரைச் சேரும். இந்நிலையில், முகேஷ் சந்திரகர் புத்தாண்டு சமயத்தில் திடீரென மாயமானார்.
தொடர்ந்து அவரது சகோதரர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், பிஜப்பூர் டவுனில் உள்ள ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரசேகர் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் இருந்த செப்டிக் டேங்கில் முகேஷின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
1 நாளைக்கு ரூ.48 கோடி சம்பளம்; சுந்தர் பிச்சையை விட 10 மடங்கு அதிகம் - யார் அந்த இந்திய வம்சாவளி நபர்!
பிரேதப் பரிசோதனை முடிவு
இதனையடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அதில், முகேஷ் சந்திரகர் தலையில் மட்டும் 15 எலும்புகள் முறிந்துள்ளன. கழுத்து எலும்பு உடைந்துள்ள நிலையில், இதயமும் கிழிக்கப்பட்டு இருக்கிறது. கல்லீரல் நான்காகச் சிதைந்திருந்துள்ளது.
விலா எலும்புகள் ஐந்து இடங்களில் சிதைந்துள்ளது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் சேர்ந்தே இந்த கொடூர கொலையைச் செய்து இருப்பார்கள் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ரூ.120 கோடி மதிப்பிலான சாலை ஒப்பந்தப் பணிகளில் நடந்த ஊழலை அம்பலப்படுத்தியதற்காகவே முகேஷ் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், ஹைதராபாத்தில் பதுங்கியிருந்த அவரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.