ரம்யா கிருஷ்ணனுக்கு வாழ்க்கை கொடுத்ததே அந்த ஐட்டம் டான்ஸ் தான் - உண்மை வெளியிட்ட பிரபலம்!
திரையுலக பிரபலம் ஒருவர் நடிகை ரம்யா கிருஷ்ணன் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் மாஸ் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தற்பொழுது வரை அந்த மாஸ் லுக்கை வைத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் தமிழில் படையப்பா என்ற படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்து பிரபல நடிகையானார்.
இவர் பல படங்களில் அம்மன் வேடத்தில் அசத்தியுள்ளார், 90ஸ் கிட்ஸ்களுக்கு அம்மன் என்றாலே இவர் தான் என்று தோன்றும் அளவிற்கு அவர் மனதில் பதிந்துள்ளார். மேலும், அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த பாகுபலி படத்தில் இவரது ராஜமாதா கதாபாத்திரம் அனைத்து ரசிகர்களையும் ஈர்த்தது.
பிரபலம் கூறிய தகவல்
இந்நிலையில், தற்பொழுது நடிகை ரம்யா கிருஷ்ணன் குறித்து சினிமா பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு பல தகவல்களை கூறியுள்ளார். அதில் அவர் கூறுகையில், "சிறுவயதில் கதாநாயகியாக அறிமுகமான நடிகைகளில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மிகவும் முக்கியமானவர். 8வது படித்துக்கொண்டு இருக்கும் போது 14 வயதில் வெள்ளைமனசு என்கிற படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த படம் சரியாக போகவில்லை என்றாலும், ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு, அனைவரையும் இந்த பெண் யார் என்று கேட்க வைத்தது. ஆனால், அவரை பிரபலமாக்கிய திரைப்படம் என்றால் அது முதல்வசந்தம் படம் தான். இந்த படத்தில் இடம் பெற்ற ஆழம் அது ஆழம் இல்ல என்ற பாடலில் பிரபலாமானார்.
அதன்பிறகு பட வாய்ப்பு இல்லாமல் இருந்தது, கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் ஆட்டமா தோரோட்டமா பாடலுக்கு டான்ஸ் ஆடினார், அது ஹிட்டடித்து ரம்யா கிருஷ்ணனுக்கு சினிமாவில் மறுவாழ்க்கை கொடுத்தது" என்று கூறியுள்ளார்.