மதுவுக்கு அடிமை.. விட்டு சென்ற கணவன்? அவ்வளவு கஷ்டம் - நடிகை ஊர்வசியின் மறுப்பக்கம்!

Jiyath
in பிரபலங்கள்Report this article
நடிகை ஊர்வசியின் முதல் திருமணம் குறித்து பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேசியுள்ளார்.
நடிகை ஊர்வசி
இயக்குநர் கே.பாக்கியராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. ஒரு காலகட்டத்தில் மலையாளம், தமிழ் மொழிகளில் டாப் கதாநாயகியாக வளம் வந்தார்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள ஊர்வசி, தனது நகைச்சுவை பேச்சு மற்றும் நடிப்பினால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் ஜே பேபி என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் ஊர்வசியின் முதல் திருமணம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேசியுள்ளார். அவர் கூறியதாவது "ஊர்வசி முதலாவதாக நடிகர் மனோஜ் கே. ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மதுவுக்கு அடிமை
சிறிய காலத்திலேயே ஊர்வசிக்கும், ஜெயனுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. அது ஒரு கட்டத்தில் முற்றி, விவாகரத்து செய்துவிடலாம் என்ற புள்ளிக்கு சென்று விட்டது.
அந்த சமயத்தில் ஊர்வசி பேட்டி ஒன்றை கொடுத்த ஞாபகம் இருக்கிறது. அந்த பேட்டியில் முதல் கணவரால்தான் மதுவுக்கு அடிமையாகி விட்டேன் என்று வெளிப்படையாக பேசி இருந்தார். அந்த சமயத்தில் அவரை சுற்றி இருந்த நல்ல ஆத்மாக்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் அவருக்கு பக்கபலமாக இருந்துள்ளனர்.
அந்த சமயத்தில் அவருக்கு ஒரு குழந்தை இருந்தது. பின்னர் சிவப்பிரசாத் என்பவரை ஊர்வசி திருமணம் செய்து கொண்டு தற்போது வரை அவருடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.