பாக்கியராஜ் ஒரு ராட்சசன்; என்னை அதற்காக கூப்பிட்டார் - வெளிப்படையாக சொன்ன ஊர்வசி!
நடிகை ஊர்வசி முந்தானை முடிச்சு படம் பற்றியும், இயக்குனர் பாக்கியராஜ் பற்றியும் பேசியுள்ளார்.
நடிகை ஊர்வசி
கேரளாவைச் சேர்ந்த நடிகை ஊர்வசி. இயக்குநர் கே.பாக்கியராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மலையாளம், தமிழ் மொழிகளில் ஒரு காலகட்டத்தில் டாப்கதாநாயகியாக வலம் வந்தார்.
இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நகைச்சுவை பேச்சு மற்றும் இவரது நடிப்பினால் பல ரசிகர்களை ஈர்த்துள்ளார். . இவர் கேரளாவை சேர்ந்த நடிகர் மனோஜ் கே ஜெயனை காதலித்து, 2000ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ஒரு மேடையில் முந்தானை முடிச்சு படத்தை பற்றியும், இயக்குநர் பாக்கியராஜ் பற்றியும் ஊர்வசி பேசியுள்ளார்.
முந்தானை முடிச்சு அனுபவம்
ஊர்வசி பேசியதாவது "நான் தற்செயலாகத்தான் சினிமாவுக்கு வந்தேன். முந்தானை முடிச்சு நான் நடிக்க வேண்டிய படமே கிடையாது. என்னுடைய அக்கா கலாரஞ்சினியை பிக்ஸ் பண்ணியிருந்த ரோலில் பாக்கியராஜ் நான் நடிக்க வேண்டும் என்று விரும்பிதான் நான் அந்த படத்தில் நடித்தேன்.
எனக்கு தமிழ் கொஞ்சம் நல்லா தெரியும், அக்காவுக்கு கொஞ்சம் மலையாள வாடை வரும். அதனால் நான் தமிழ் படித்து சொல்கிறேன் என அக்காவுடன் சும்மா கூடப் போனேன். என் அக்காவுக்கு பாக்கியராஜ் டயலாக் சொல்லி கொடுத்துக் கொண்டிருந்தார். சொல்லி கொடுக்கும்போதெல்லாம், நான் கூடக் கூட பேசிக்கொண்டிருந்தேன். நான் பேசும்போதெல்லாம் பாக்கியராஜ் என்னை கவனித்துக் கொண்டே இருந்தார்.
நான் முதன் முதலில் பாக்கியராஜை பார்த்தது 'குமரி பெண்ணின் உள்ளத்திலே' என்ற திரைப்படத்தில்தான் பார்த்தேன். அந்த படத்தில் ஒரு சீனில், க்ளோஸ்அப் ஷாட்டில் பாக்கியராஜின் முகம் மிகவும் சாதுவாக இருக்கும். அப்போது நான் நினைத்தேன் பாக்கியராஜ் யாரையுமே தீட்டாத ஒரு சாதுவான மனிதன் என்று நினைத்தேன். அதை மனதில் வைத்து அக்காவிடம் பாக்கியராஜ் டயலாக் சொல்லிக் கொடுக்கும்போது நான் கூடக் கூட பேசினேன்.
உடனே பாக்கியராஜ் என்னிடம் 'இதோ பாரு, எதுக்கு நீ முந்திரிக் கொட்டை மாதிரி பேசிட்டே இருக்கிற. அங்க ஓரமா போயி உக்காரு என்று சொன்னார். எனக்கு பயம் வந்துவிட்டது, படத்தில் மட்டும் மிகவும் பாவமாக நடித்து ஏமாற்றுகிறார். நிஜத்தில் இவர் ஒரு ராட்சசன் போலிருக்கிறது என்று நினைத்தேன். வீட்டிற்கு வந்து எனது அம்மாவிடம் 'பாக்கியராஜ் படம் வேண்டவே வேண்டாம் அம்மா, நிறைய திட்டுவார் போலிருக்கு என்று சொன்னேன்.
ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு மாதம் முடிந்து என்னை நடிக்க வருமாறு அழைத்தார். நான் அன்றே முடிவு பண்ணினேன், இவர் என்னை பழி வாங்கத்தான் கூப்பிடுகிறார், லொக்கேஷனில் என்னை திட்டு திட்டுனு திட்டப் போகிறார் பாக்கியராஜ் என்று நினைத்தேன் ' என்று ஊர்வசி கலகலப்பாக பேசியுள்ளார்.