‘கொஞ்சம் அங்க பாரு கண்ணா’ - ‘பாஷா’ பட வசனத்தில் இணையதளத்தை கலக்கும் செஸ் ஒலிம்பியாட் வீடியோ...!
செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேற்று மாலை 5 மணியிலிருந்து நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மாமல்லபுரத்தில் முகாமிட்டுள்ளனர்.
நிகழ்ச்சியில், செஸ் ஒலிம்பியாட் ஜோதியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விஸ்வநாதன் ஆனந்த் வழங்க, அதை பிரதமர் மோடியிடம்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்தார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டல் இன்று முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது.
போட்டிகள் தினமும் பிற்பகல் 3 மணி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நட்சத்திர விடுதியை சுற்றி போலீசாரின் மூன்று அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வைரலாகும் வீடியோ
இந்நிலையில், தமிழக அரசு ‘பாஷா’ பட வசனங்கள் கொண்ட செஸ் ஒலிம்பியாட் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
When Knight Basha and King Antony first met! ?
— Chennai Chess 2022 (@chennaichess22) July 28, 2022
Watch till the end. ?@rajinikanth
. #ChessChennai2022 #rajinikanth#superstar #chess #chessolympiad #chennaichess22 #chennaichess #grandmaster #mahabalipuram #chesschennaiopeningceremony #chessolympiadopeningceremony #rajini pic.twitter.com/URf1wQpC7B