பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறதா திமுக? செஸ் ஒலிம்பியாட்டில் நடந்த அரசியல் ரகசியம்..!
சென்னையில் நேற்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜுலை 28 தேதி முதல் ஆகஸ்ட் 10 ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதன் தொடக்க விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி செஸ் கட்டங்கள் பொறிக்கப்பட்ட கதர் வேட்டி சட்டையில் பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார்.
விழாவிற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி சட்டையில் வந்து அனைவரையும் கவர்ந்தார். விழாவிற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
இந்த தொடக்க நிகழ்ச்சியில் தமிழர்களின் பெருமையை வெளிப்படுத்தும் விளக்கக் படங்களும் பார்வையாளர்களை கவர்ந்தது.
விழாவில் முக்கிய பிரபலங்கள்
நாட்டின் 75 நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சென்னை கொண்டு வரப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் வழங்கினார். பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மேலும் இந்த விழாவில் தமிழ் சினிமாவின் சூப்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், வைரமுத்து, நடிகர் கார்த்தி, உதய நிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் தமிழகத்தின் உணர்த்தும் வகையில் நடன கலைஞர்களின் கண்கவர் இசை நிகழ்ச்சியில் கமல் ஹாசனின் குரல் இடம் பெற்று இருந்தது.
வாழ்த்து தெரிவித்த பிரதமர் - கோரிக்கை வைத்த முதலமைச்சர்
பின்னர் விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அற்புதமான அறிவாளிகளையும் ஆழமான கலாச்சாரத்தையும் கொண்டது தமிழக மண். விருந்தோம்பல் என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி பேசினார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஏற்பாடுகளை குறைந்த காலத்தில் அற்புதமான ஏற்பாடுகளை செய்த ஒருங்கிணைப்பாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
இதையடுத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது போன்ற வாய்ப்புகளை தமிழகத்திற்கு தாருங்கள் என பிரதமருக்கு கோரிக்கை வைத்தார்.
பாஜக - திமுக கூட்டணியா?
செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழர்களின் தொன்மை, பாரம்பரியம், கலாச்சாரம் உள்ளிட்டவற்றை தமிழக அரசு உலகம் முழுவதும் எடுத்துச் சென்றுள்ளதாகவும்,
ஒலிம்பியாட் செஸ் போட்டி துவக்க விழாவை அற்புதமாக நடத்தியதற்கு பாஜக சார்பில் நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.
அவரின் இந்த கருத்தை அடுத்து செய்தியாளர்கள் திமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை ஒலிம்பியாட் தொடக்க விழாவை அற்புதமாக நடத்தியதால் பாராட்டியதாகவும், அதற்காக கூட்டணிக்கு எல்லாம் வாய்ப்பு இல்லை எனவும் கூறினார்.
அண்மையில் தமிழக அரசை விமர்சித்து வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசு மீது அடுக்கடுக்காண குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது அண்ணாமலை தமிழக அரசை பாராட்டி இருப்பதால் செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலம் திமுகவை பாராட்டி இருப்பது திமுகவினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
பிரதமர் மகிழ்ச்சி
சென்னை வந்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் போல் ஆச்சரியமூட்டி அன்பை பொழிந்துள்ள சென்னையே, அற்புதமான வரவேற்பால் அகமகிழந்தேன் என பதிவிட்டுள்ளார்.
எப்போதும்போல் ஆச்சரியமூட்டி அன்பைப் பொழிந்துள்ள சென்னையே, அற்புதமான வரவேற்பால் அகமகிழ்ந்தேன்! pic.twitter.com/Q3NXYIi9vd
— Narendra Modi (@narendramodi) July 28, 2022