#LIVE செஸ் ஒலிம்பியாட் தொடக்கம்; வேட்டி சட்டையில் நேரு உள்விளையாட்டு அரங்கம் வந்தடைந்தார் பிரதமர் மோடி

M. K. Stalin Narendra Modi Chennai 44th Chess Olympiad
By Sumathi Jul 28, 2022 12:53 PM GMT
Report

செஸ் ஒலிம்பியாட் போட்டியை இன்று தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி வேட்டி சட்டையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் வந்தடைந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

செஸ் ஒலிம்பியாட் 

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக அகமதாபாத்தில் இருந்து தனி விமான மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

#LIVE செஸ் ஒலிம்பியாட் தொடக்கம்; வேட்டி சட்டையில் நேரு உள்விளையாட்டு அரங்கம் வந்தடைந்தார் பிரதமர் மோடி | Chess Olympiad Pm Modi Is Came To Chennai Today

ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையார் விமான தளத்திற்கு செல்லும் அவர், கார் மூலம் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார்.வழிநெடுகிலும் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என் ரவி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். செஸ் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்று விட்டு பின்னர் ஆளுநர் மாளிகைக்கு பிரதமர் செல்கிறார்.

பிரதமர் மோடி 

ஆளுநர் மாளிகையில் இரவு தங்கும் பிரதமர் நாளை காலை 10 மணிக்கு அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவுள்ளார். பட்டப்படிப்பு விழா முடிந்த பிறகு சென்னை விமான நிலையம் செல்லும் பிரதமர் அங்கிருந்து அகமதாபாத் செல்ல திட்டமிட்டுள்ளார்.

#LIVE செஸ் ஒலிம்பியாட் தொடக்கம்; வேட்டி சட்டையில் நேரு உள்விளையாட்டு அரங்கம் வந்தடைந்தார் பிரதமர் மோடி | Chess Olympiad Pm Modi Is Came To Chennai Today

பிரதமரின் வருகை ஒட்டி சென்னையில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .பேருந்து நிலையம், ரயில் நிலையம் மக்கள் நடமாடும் முக்கிய இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அத்துடன் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான ஏற்பாடுகள் குறித்து மாமல்லபுரத்தில் அமைச்சர்களும் ஆய்வு செய்தனர்.

பலத்த பாதுகாப்பு

மத்திய மாநில உளவு பிரிவு போலீசார், உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், ஆயுதப்படை சிறப்பு காவல் படை 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேரு ஸ்டேடியம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அசம்பாவிதங்களை தவிர்க்கும் வண்ணம் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.