செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கலை நிகழ்ச்சி குழுவில் 4 பேருக்கு கொரோனா
44 வது ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்குகிறது.
செஸ் ஒலிம்பியாட்
ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் தமிழகத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பறைசாற்றும் விதமாக கண்கவர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
4 பேருக்கு கொரோனா
செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா சார்பில் 25 வீரர்கள் பங்கேற்கும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், சேதுராமன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இதன்மூலம் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் தமிழக வீரர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியா தொடக்க விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.