செஸ் ஒலிம்பியாட் போட்டி - பாதுகாப்பு பணியில் 4000 போலீசார்

Tamil Nadu Police
By Nandhini Jul 22, 2022 10:04 AM GMT
Report

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின்போது பாதுகாப்பு பணியில் 4000 போலீசார் ஈடுபட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

செஸ் ஒலிம்பியாட்

44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி மாமல்லபுரத்தில் வரும் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த ஒலிம்பியாட் போட்டியின் இலச்சினை மற்றும் சின்னத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 9-ம் தேதி அறிமுகப்படுத்தினார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி தொடங்க உள்ளது.

நெறிமுறைகள் வெளியீடு

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டது. வீரர்கள், தங்கும் விடுதிகள், விளையாட்டு நடைபெறும் அரங்கம், பார்வையாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

Chess Olympiad

பாதுகாப்பு பணியில் 4000 போலீசார்

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட்டில் 190 நாடுகளிலிருந்து 2000 வீரர்கள் பங்கேற்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன.

மேலும், சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுக்கு 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

100 ஆய்வாளர்கள், 380 எஸ்.ஐ.க்கள், 3520 காவலர்கள் என 17 நாட்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு காவலருக்கு ரூ.250 வீதம் உணவுப்படியாக ரூ.1.70 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.