செஸ் ஒலிம்பியாட் : சென்னை to மாமல்லபுரம் வரை இலவச பேருந்து
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், சென்னை முதல் மாமல்லபுரம் வரை இலவச பேருந்துகளை இயக்க உள்ளது.
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
பிரதமர் மோடி வருகை
இந்த போட்டியின் தொடக்க விழாவில், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த நிலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், சென்னை முதல் மாமல்லபுரம் வரை இலவச பேருந்துகளை இயக்க உள்ளது. இதற்காக 5 பேருந்துகள் இலவசமாக இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.