செஸ் ஒலிம்பியாட்டில் பல்லாங்குழி ஆடிய வெளிநாட்டு செஸ் வீரர்கள்...!

Chess Tamil nadu 44th Chess Olympiad
By Nandhini Aug 03, 2022 06:50 AM GMT
Report

செஸ் ஒலிம்பியாட்டில் பல்லாங்குழி, ஆடு புலி ஆட்டம், பம்பரம் சுற்றி வெளிநாட்டு செஸ் வீரர்கள் விளையாடி மகிழ்ந்துள்ளனர். 

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி-

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டல் கடந்த 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது.

போட்டிகள் தினமும் பிற்பகல் 3 மணி முதல் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதிலிருந்து செஸ் விளையாட்டு வீரர்கள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மாமல்லபுரத்தில் முகாமிட்டுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நட்சத்திர விடுதியை சுற்றி போலீசாரின் மூன்று அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் அதிலும் குறிப்பாக நமது தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

'ஆடு புலி ஆட்டம்' விளையாடிய வெளிநாட்டினர்

நம் முன்னோர்கள் உடல் வலிமை, மன வலிமை, புத்தி கூர்மை பெற பல விளையாட்டுக்களை நமக்கு சொல்லிக்கொடுத்து பயிற்றுவித்தனர்.

விளையாட்டுகளில் புத்தி கூர்மை அதிகம் கொண்டவர்கள் விளையாடும் விளையாட்டாக செஸ் விளையாட்டு பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நம் நாட்டிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு செஸ் விளையாட்டு வீரர்கள், செஸ் விளையாட்டோடு சேர்த்து 'ஆடு புலி ஆட்டம்' , 'பல்லாங்குழி', 'பம்பரம் சுற்றுவது' என நம்ம ஊரு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்துள்ளனர்.

இது குறித்து வெளிநாட்டு செஸ் வீரர்கள் கூறுகையில், இந்த விளையாட்டுக்கள் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

இந்த விளையாட்டுக்களை இங்கு கற்றுக்கொண்டு என் நாட்டிற்கு சென்று விளையாடப்போவதாகவும், இது குறித்து அனைவருக்கும் சொல்லிக்கொடுக்கப்போவதாகவும் பெருமையோடு தெரிவித்தனர்.       

chess-olympiad-chennai