ஆழ்கடலில் ‘தம்பி’ போல் உடை அணிந்து செஸ் விளையாடிய பயிற்சியாளர்கள் - வைரலாகும் வீடியோ

Chess 44th Chess Olympiad
By Nandhini Aug 01, 2022 12:57 PM GMT
Report

ஆழ்கடலில் ‘தம்பி’ போல் உடைந்து செஸ் விளையாடிய பயிற்சியாளர்களின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டல் கடந்த 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது. போட்டிகள் தினமும் பிற்பகல் 3 மணி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நட்சத்திர விடுதியை சுற்றி போலீசாரின் மூன்று அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆழ்கடலில் செஸ் விளையாடிய பயிற்சியாளர்கள் 

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் நீலாங்கரையில், 60 அடி ஆழத்தில், கடலுக்குள் செஸ் விளையாடி ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர்கள் அசத்தியுள்ளனர். ‘தம்பி’ போல் உடையணிந்து கடலுக்குள் சென்று புது முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

chess