செஸ் ஒலிம்பியாட் போட்டி - ஹாங்காங் அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய மகளிர் அணி..!

Chess Tamil nadu 44th Chess Olympiad
By Nandhini Jul 29, 2022 02:17 PM GMT
Report

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டல் இன்று முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது. போட்டிகள் தினமும் பிற்பகல் 3 மணி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நட்சத்திர விடுதியை சுற்றி போலீசாரின் மூன்று அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போட்டி தொடங்கியது

இந்நிலையில், மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்று ஆட்டம் தொடங்கியது. செஸ் போட்டிகளை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்தார். இந்த செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்று தொடக்க நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அமைச்சர் மெய்யநாதன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவிற்கு வெற்றி

செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்று ஆட்டத்தில், இந்திய ஓபன் ‘B’ அணியில் விளையாடி ரவுனக் சத்வாணி வெற்றி பெற்றுள்ளார். ஐக்கிய அரபு அமீரக வீரர் அப்துல் ரகுமானை வீழ்த்தி தனது வெற்றியை கைப்பற்றினார் ரவுனக் சத்வாணி. இவர் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கி 36-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

இந்தியாவிற்கு அடுத்தடுத்து குவியும் வெற்றி

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில், ரவுனக் சத்வாணியைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் தமிழக இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷும் பெற்றி பெற்று அசத்தியிருக்கிறார்.

ஓபன் சி பிரிவில் இடம் பெற்ற கார்த்திகேயன் முரளி, அபிஜித் குப்தா ஆகியோர் பெற்று பெற்று அசத்தியுள்ளனர். மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய ‘பி’ பிரிவு மகளிர் அணியில் இடம்பெற்றுள்ள கோம்ஸ் மேரி ஆன், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்திய ‘சி’ பிரிவில் வீராங்கனைகள் ஈஷா கர்வாடே, பிரதியுஷா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில், ஹாங்காங் அணி வீராங்கனையை 49-வது நகர்த்தலில் ஈஷா கர்வாடே வெற்றி நிலையில் பிரதியுஷாவும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஹாங்காங் அணியை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி

இந்நிலையில், மகளிர் 'சி' பிரிவில் ஹாங்காங் அணியை இந்திய மகளிர் அணி ஒயிட்வாஷ் செய்துள்ளது.

ஈஷா கார்வதே, நந்திதா, சாஹிதி வர்ஷினி, பிரத்யுஷா போடா உள்ளிட்டோர் 4 புள்ளிகளுடன் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தின் நந்திதா 29-வது நகர்த்தலில் ஹாங்காங் வீராங்கனை ஜிங் ஜிங் டெங்கை வீழ்த்தி அசத்தியுள்ளார். 

chess-olympiad-chennai