செஸ் ஒலிம்பியாட் போட்டி - 3ம் சுற்று ஆட்டம் தொடங்கியது...!
மாமல்லப்புரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3ம் சுற்று ஆட்டம் தற்போது தொடங்கியுள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டல் கடந்த 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது.
போட்டிகள் தினமும் பிற்பகல் 3 மணி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நட்சத்திர விடுதியை சுற்றி போலீசாரின் மூன்று அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் அதிலும் குறிப்பாக நமது மாநிலமான தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவிற்கு வெற்றி
செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்று ஆட்டத்தில், இந்திய ஓபன் ‘B’ அணியில் விளையாடி ரவுனக் சத்வாணி வெற்றி பெற்றுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரக வீரர் அப்துல் ரகுமானை வீழ்த்தி தனது வெற்றியை கைப்பற்றினார் ரவுனக் சத்வாணி. இவர் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கி 36-வது நகர்த்தலில் தன் முதல் வெற்றியை பதிவு செய்தார். இதற்கு அடுத்தடுத்து இந்திய வீரர்கள் வெற்றி பெற்று அசத்தி வருகின்றனர்.
3ம் சுற்று ஆட்டம் தொடங்கியது
இந்நிலையில், மாமல்லப்புரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3ம் சுற்று ஆட்டம் தற்போது தொடங்கியுள்ளது. இந்தியா சார்பில் இன்றைய போட்டியில் 6 அணிகள் களமிறங்குகின்றன.