செஸ் ஒலிம்பியாட் போட்டி - வீரர்களுக்கு யோகா பயிற்சி கொடுக்கும் மருத்துவர்கள்
செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேற்று மாலை 5 மணியிலிருந்து நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில் பிரதமர் மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மாமல்லபுரத்தில் முகாமிட்டுள்ளனர்.
நிகழ்ச்சியில், செஸ் ஒலிம்பியாட் ஜோதியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விஸ்வநாதன் ஆனந்த் வழங்க, அதை பிரதமர் மோடியிடம்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்தார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டல் இன்று முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது.
போட்டிகள் தினமும் பிற்பகல் 3 மணி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நட்சத்திர விடுதியை சுற்றி போலீசாரின் மூன்று அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வீரர்களுக்கு ‘யோகா’ பயிற்சி
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் வெற்றிக்காக பாடுபடுவதால் அவர்கள் மனதளவில் உளைச்சலுக்குள்ளாவார்கள்.
இதை தடுக்கும் விதமாக தமிக அரசு அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கு அரசு ‘யோகா’ மற்றும் இயற்கை மருத்துவமனை மருத்துவர்களை கொண்டு மன அழுத்தத்தை குறைப்பதற்கான பயிற்சிகளை வழங்க ஏற்பாடு செய்திருக்கிறது.
இந்நிலையில், போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களில் மருத்துவர்கள் யோகா பயிற்சி கொடுத்து வருகிறார்கள்.
யோகா பயிற்சி மூலம் மன அழுத்தம் குறைந்து, விளையாட்டில் முழு கவனத்தையும் வீரர்கள் செலுத்துவார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பயிற்சிகளை மருத்துவர்கள் சொல்லிக் கொடுக்கும் வீரர்கள் உற்சாகமாக கற்றுக் கொண்டு வருகிறார்கள்.