செஸ் ஒலிம்பியாட் போட்டி..4 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை - அமைச்சர் எ.வ.வேலு

Government of Tamil Nadu
By Nandhini Jul 23, 2022 06:41 AM GMT
Report

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி 4 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 

செஸ் ஒலிம்பியாட்

44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி மாமல்லபுரத்தில் வரும் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த ஒலிம்பியாட் போட்டியின் இலச்சினை மற்றும் சின்னத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 9-ம் தேதி அறிமுகப்படுத்தினார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி தொடங்க உள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி..4 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை - அமைச்சர் எ.வ.வேலு | Chess Olympiad Chennai

நெறிமுறைகள் வெளியீடு

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டது. வீரர்கள், தங்கும் விடுதிகள், விளையாட்டு நடைபெறும் அரங்கம், பார்வையாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் 4000 போலீசார்

செஸ் ஒலிம்பியாட்டில் 190 நாடுகளிலிருந்து 2000 வீரர்கள் பங்கேற்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன. மேலும், சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுக்கு 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 100 ஆய்வாளர்கள், 380 எஸ்.ஐ.க்கள், 3520 காவலர்கள் என 17 நாட்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூர் விடுமுறை

இந்நிலையில் இன்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவையொட்டி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.