திடீரென நீல நிறத்தில் மாறும் நாய்கள்; மிரண்ட மக்கள் - என்ன காரணம்?
நாய்கள் நீல நிறத்தில் மாறியதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
அணு கசிவு
உக்ரைன், செர்னோபில் என்ற பகுதியில் அணு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. அங்கு மோசமான ஒரு அணு கசிவு விபத்து ஏற்பட்டது. இதனால் பலர் உயிரிழந்தனர்.

மேலும், அருகே உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் அதிகளவில் வெளியேற்றப்பட்டனர். தற்போது அங்கு வசித்த நாய்கள் நீல நிறத்தில் மாறியுள்ளன. அதன் அடுத்த தலைமுறையும் அவ்வாறே மாறியுள்ளன. அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீல நிறத்தில் நாய்கள்
நாய்கள் எதாவது புதிய கெமிக்கல்களுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என்றும் அதுவே நீல நிறத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் மருத்துவ குழுவினர் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து ஆய்வுக்காக நாய்களின் ரோமம், தோல் மற்றும் ரத்த மாதிரிகளைச் சேகரித்து வருகின்றனர்.

இது குறித்து டாக்ஸ் ஆஃப் செர்னோபில் தங்கள் எக்ஸ் பக்கத்தில், "இதற்கான காரணம் எங்களுக்குத் தெரியவில்லை, என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய நாங்கள் அவற்றைப் பிடிக்க முயல்கிறோம்.
அங்குள்ள கெமிக்கல்களை தொடர்பு கொண்டிருக்கலாம். அவற்றின் செயல்பாடுகளில் மாற்றம் எதுவும் தென்படவில்லை. மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் தெரிகின்றன" என குறிப்பிட்டுள்ளனர்.