சென்னை யாருக்கு சொந்தம்? மறைமுகமாக பா.ரஞ்சித்தை விமர்சித்த சேரன்!
பா.ரஞ்சித் சில தினங்கள் முன்பு, சென்னை தங்களுக்கே சொந்தம் என பேசிய கருத்துக்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.
பா.ரஞ்சித் கருத்து
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதை அடுத்து, அந்த விவகாரத்தில் தொடர்ந்து அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் பா.ரஞ்சித்.
அவர் பேசும் போது, இந்த மெட்ராஸை எங்களை மீறி யாரும் ஆட்சி செய்து விடவே முடியாது என்று கூறினார். அவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பேசியதில் இந்த கருத்துக்களே பெரிதாக கவனிக்கப்பட்டு விமர்சனத்திற்குள்ளானது.
சேரன் விமர்சனம்
இது தொடர்பாக பல தரப்பில் இருந்தும் பல கருத்துக்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மெட்ராஸ் - சென்னை என்பதை யாரும் தனியாக உரிமை கொள்ள முடியாது என பேசி வருகிறார்கள்.
இந்த சூழலில், மறைமுகமாக சேரன் இது தொடர்பாக சமூகவலைதளபக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரின் பதிவு வருமாறு, இயக்குனர் சிம்புதேவனின் #BOAT திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது... ஒரு பெரும் அரசியலை அழகாக எளிமையாக ஒரு படகை வைத்து விளையாடி இருக்கிறார்.. சமீபத்தில் வித்தியாசமான அனுபவத்தை தந்த திரைப்படம்.. சென்னை யாருக்கு சொந்தம் ? யார் உரிமை கொண்டாடுகிறார்கள்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் சிம்புதேவனின் #BOAT திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது... ஒரு பெரும் அரசியலை அழகாக எளிமையாக ஒரு படகை வைத்து விளையாடி இருக்கிறார்.. சமீபத்தில் வித்தியாசமான அனுபவத்தை தந்த திரைப்படம்.. சென்னை யாருக்கு சொந்தம் ? யார் உரிமை கொண்டாடுகிறார்கள்.https://t.co/HSe7vI4V30
— Cheran (@directorcheran) July 24, 2024
ஏற்கனவே, அமைச்சர் சேகர் பாபு, இயக்குனர்கள் பேரரசு, மோகன் ஜி ஆகியோர் இது தொடர்பாக கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.