முருகன் மலை ‘ஏசு மலை’யாக மாறும்; சர்ச்சை பேச்சு - கிறிஸ்துவ நிர்வாகியை தூக்கிய போலீஸ்!
கிறிஸ்தவ முன்னணி அமைப்பின் நிர்வாகி ஜோசப் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னிமலை விவகாரம்
ஈரோடு, சென்னிமலையில் மத மோதலைத் தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் பேசியவர்களைக் கண்டித்தும், அவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, ஜான் பீட்டர் என்பவர் அளித்த புகாரின்பேரில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நிர்வாகி கைது
அதனையடுத்து, சென்னிமலை பேருந்து நிலையம் பகுதியில் கிறிஸ்தவ முன்னணி அமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய சரவணன் ஜோசப் என்பவர், சென்னிமலை முருகன் கோயில் மலையை கல்வாரி மலை (ஏசுமலை) என பெயர் மாற்றுவோம் என சர்ச்சையை கிளப்பினார்.
இதனை கண்டித்து சென்னிமலையை காப்பாற்றுவோம் என்ற முழக்கத்துடன் இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், செங்கல்பட்டில், சரவணன் ஜோசப் கைது செய்யப்பட்டுள்ளார்.