காவல்துறைக்கு ரூ.74.8 கோடிக்கு 85 இருச்சக்கர வாகனங்கள் ? - வதந்திக்கு தமிழக அரசு பதிலடி!

M K Stalin Government of Tamil Nadu Tamil Nadu Police
By Vidhya Senthil Aug 05, 2024 05:29 AM GMT
Report

தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை காவல்துறைக்கு ரூ.74.8 கோடிக்கு 85 இருச்சக்கர வாகனங்கள் வாங்கியதாக சமூக வலைதளத்தில் பரவிய நிலையில் தமிழ்நாடு அரசின் தகவல் சரிப்பார்ப்பகம் விளக்கமளித்துள்ளது.

வதந்தி

3ஆகஸ்ட் 01 வியாழன் 'சென்னை காவல்துறைக்கு ரூ.74.8 கோடி செலவில் 85 அதிநவீன இருசக்கர வாகனங்கள்' வாங்கியதாக செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.

காவல்துறைக்கு ரூ.74.8 கோடிக்கு 85 இருச்சக்கர வாகனங்கள் ? - வதந்திக்கு தமிழக அரசு பதிலடி! | Chennaipolice Twowheelers Rumor

 கடந்த ஆண்டு நடைபெற்ற மானிய கோரிக்கையில் காவல் துறைக்கு , 'கழிவு செய்யப்பட்ட போலீஸ் வாகனங்களுக்கு பதிலாக, ரோந்து பணிகளை மேற்கொள்ள, 200 புதிய இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, 40 பஜாஜ் பல்சர் இரு சக்கர வாகனங்கள், 39.38 லட்சம் ரூபாய் செலவிலும், 45 டி.வி.எஸ்., 'ஜூபிடர்' இரு சக்கர வாகனங்கள், 34.69 லட்சம் ரூபாய் செலவிலும் வாங்கப்பட்டுள்ளன. 

30 குண்டுகள் முழங்க பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு தமிழக காவல்துறை சார்பில் இறுதி மரியாதை...!

30 குண்டுகள் முழங்க பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு தமிழக காவல்துறை சார்பில் இறுதி மரியாதை...!

உண்மை என்ன?

இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை காவல்துறைக்கு ரூ.74.8 கோடிக்கு 85 இருச்சக்கர வாகனங்கள் வாங்கியதாக சமூக வலைதளத்தில் பரவிய நிலையில் தமிழ்நாடு அரசின் தகவல் சரிப்பார்ப்பகம் விளக்கமளித்துள்ளது.

 காவல்துறைக்கு ரூ.74.8 கோடிக்கு 85 இருச்சக்கர வாகனங்கள் ? - வதந்திக்கு தமிழக அரசு பதிலடி! | Chennaipolice Twowheelers Rumor

ரூ.74.8 கோடி அல்ல, ரூ.74.08 லட்சம்!24.07.2024 அன்று சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 40 BAJAJ Pulsar இருசக்கர வாகனங்கள் ரூ.39,38,500 செலவிலும், 45 TVS Jupiter இருசக்கர வாகனங்கள் ரூ.34,69,500 செலவிலும், என மொத்தம் 85 இருசக்கர வாகனங்கள் ரூ.74.08 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்பட்டு முதல்வர் அவர்களால் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.