வாத்தி கம்மிங்... சென்னை மைதானத்தில் நடனமாடிய அஸ்வின்: வைரலாகும் காட்சிகள்
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அதிரடி ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றியில் பெரும்பங்காற்றினார் ரவிச்சந்திரன் அஸ்வின். இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இதன்பின்னர் அவர் அளித்த பேட்டியில், சிறுவயதில் சேப்பாக்கம் மைதானத்தில் ஒருமுறையாவது விளையாட மாட்டோமா என்ற ஏக்கம் இருந்தது.
இம்மைதானத்தில் நடக்கும் அனைத்து போட்டிகளையும் பார்க்க என் அப்பா அழைத்து வருவார், ஆனால் இப்போது எனக்காக ரசிகர்கள் கைதட்டுகிறார்கள்.
DON'T MISS! Local boy Ashwin's special message in Tamil for his home crowd in Chennai #INDvENG #IndiavsEngland pic.twitter.com/0HOJQGVy0k
— Swarnjeet Nath Tiwary (@Swarnjeet_6402) February 16, 2021
என்ன பேசுவதென்றே தெரியவில்லை, வார்த்தைகள் வரவில்லை, இந்த போட்டி மிகச்சிறந்த ஒன்று, ஒரு ஹீரோவைப் போல் உணர்கிறேன். இந்த வெற்றியை சென்னை ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கின்றேன் என தெரிவித்தார். இதற்கிடையே போட்டியின் போது, நடிகர் விஜய்யின் மாஸ்டர் பட பாடலான வாத்தி கம்மிங் பாடலின் நடன அசைவுகளை அஸ்வின் ஆடிய வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
Ashwin doing the #VaathiComing shoulder drop at the Chepauk! Happy ending to a proper cricket festival in Chennai! ??????? #INDvENG #Master pic.twitter.com/VEUQnEBoDL
— Srini Mama (@SriniMaama16) February 16, 2021