இனி 10 மணி நேர பயணம் இல்லை; 2 மணி நேரம்தான் - சென்னைக்கு வரும் புதிய ரயில்

Chennai Bengaluru Hyderabad Indian Railways
By Karthikraja Feb 21, 2025 09:30 AM GMT
Report

சென்னையிலிருந்து 2 மணி நேரத்தில் ஹைதராபாத் செல்லும் வகையில் அதிவேக ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்திய ரயில்வே

இந்தியாவின் பொதுப்போக்குவரத்தில் ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் ரயில் மூலம் பயணம் செய்து வருகின்றனர்.

chennai hyderabad train 2 hours

பயணிகளின் பயணத்தை மேம்படுத்தவும், பயண நேரத்தை குறைக்கவும், ரயில்வே நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் படி அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

சென்னை - ஹைதராபாத்

அதனை தொடர்ந்து ஹைதராபாத்திலிருந்து சென்னை மற்றும் பெங்களூருவிற்க்கு அதிவேக ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்தால், தற்போது 10 மணி நேரமாக உள்ள பயண நேரம் பெங்களூருவுக்கு 2 மணி நேரமாகவும், சென்னைக்கு 2 மணி 20 நிமிடமாகவும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமான பயண நேரமே 1 மணி நேரம் 20 நிமிடமாக உள்ள நிலையில், கூடுதலாக 1 மணி நேரத்தில் ரயில் பயணத்தில் சென்று விடலாம். 

chennai hyderabad train 2 hours

தற்போது, சரக்கு ரயில்களும், அதிவேக ரயில்களும் ஒரே பாதையில் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்த இந்த அதிவேக ரயில்களுக்கு பிரத்யேக வழித்தடங்கள் உருவாக்கப்பட உள்ளது. ஹைதராபாத்-சென்னை வழித்தடம் 705 கி.மீ. நீளமாக இருக்கும் என்றும், இந்த ரயில் சராசரியாக மணிக்கு 320 கிமீ வேகத்தில் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

15 ஆண்டுகள்

மும்பை - அஹமதாபாத்திற்கு இடையே உருவாக்கப்பட்டு வரும் புல்லட் ரயில் திட்டத்தை போல் இந்த திட்டம் உருவாக்கப்பட உள்ளது. 2021 ஆம் ஆண்டு 1.65 லட்சம் கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட மும்பை - அஹமதாபாத் 2028 ஆம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத் - சென்னை அதிவேக ரயில் வழித்தடத்தை உருவாக்க பொதுத்துறை நிறுவனமும், பொறியியல் ஆலோசனை நிறுவனமுமான RITES, இறுதி நில ஆய்வுக்கான டெண்டருக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு நிறைவடைய 15 ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.