விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அண்ணன் - குடும்ப சண்டைய இதுலயா காட்டனும்?
துபாய் செல்லும் தங்கையின் பயணத்தை நிறுத்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் இருந்து துபாய்க்கு இன்று காலை 7.35 மணிக்கு இண்டிகோ விமானம் ஒன்று 174 பயணிகளுடன் பயணம் செய்ய இருந்தது. அந்த விமானத்தில் பயணிகள் அனைவரும் அமர்ந்த பிறகு அதில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அந்த விமானம் புறப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து சென்னை விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் தீவிரமாக சோதனையிட்டனா்.
அண்னன் - தங்கச்சி
ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரிய வந்தது. தொடர்ந்து, சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, அது சென்னை மணலியில் உள்ள ஒரு நபர் பேசியது தெரிந்தது.
இதை அடுத்து சென்னை மாநகர போலீஸ், அவரை சுத்தி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவருடைய தங்கையும், தங்கை கணவரும் இன்று அந்த விமானத்தில் துபாய் செல்ல இருக்கின்றனர்.
ஆனால் இவர்களுக்குள் ஏதோ குடும்பப் பிரச்சனை இருப்பதால், அந்த பிரச்சனை காரணமாக இதை போல் வதந்தியை கிளப்பியது தெரியவந்தது. இதன் அடிப்படையில், மணலியைச் சேர்ந்த அந்த நபரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.