காலையிலேயே பரபரப்பு - சென்னை தி.நகரில் பிரபல 38 கடைகளுக்கு சீல்!!
சென்னை தி.நகர், மாநிலத்தின் முக்கிய பொருளாதார இடமாகவே விளங்குகிறது.
தி.நகர்
சென்னை தி.நகரில் மக்கள் தேடும் ஒரு பொருள் கிடைக்காத நிலையே இல்லை. தினசரி உபயோக பொருட்களில் துவங்கி, துணி, நகை, வீட்டு உபயோக பொருட்களை வரை என அனைத்துமே கிடைக்கின்றன.
தினமும் இங்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிவது இயல்பே. பெரிய பெரிய வணிக பிரபல துணி கடைகள், வணிக வளாகங்களில் துவங்கி பல கடைகள் இங்கு உள்ளன. இந்நிலையில் தான் இன்று காலையே சென்னை தி.நகரிலுள்ள சுமார் 38 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளார்கள்.
சீல்
சென்னை மாநகராட்சிக்கான சொத்து வரியை செலுத்தாத நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை தி.நகர், பாண்டி பஜார் இடங்களில் அமைத்துள்ள கடைகளில் மொத்தமாக சுமார் 90 லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்தாமல் இருந்துள்ளதாகவும் அதன் பேரிலேயே இந்த நடவடிக்கை ,மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.