சிசிடிவி கேமராவுக்கு முத்தம்... தில்லாக போலீசாருக்கு சவால்விட்ட திருடர்கள்!
மர்மநபர்கள் சிசிடிவி கேமராவிற்கு முத்தம் கொடுக்கும் சிசிடிவி காட்சி சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.
மர்மநபர்கள்
சென்னை மடிப்பாக்கம் மற்றும் உள்ளகரம் பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனம், சைக்கிள் ஆகியவை திருடு போவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சில மர்ம நபர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர். அங்கு பொறுத்தியிருந்த சிசிடிவி கேமராவிற்கு முத்தம் கொடுத்து சென்றுள்ளனர்.
சிசிடிவி கேமாராவுக்கு முத்தம்
அவசரமாக சுற்றிக் கொண்டிருந்த இளைஞர்கள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்போம் என அறிந்து தில்லாக போலீசாருக்கு சவால் விடும் பாணியில் சிசிடிவிக்கு அருகில் வந்து முகத்தை காடி முத்தம் கொடுத்து விட்டு சென்றுள்ளனர்.
இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த சிசிடிவி காட்சியோடு உள்ளகரம் பகுதி மக்கள் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
சிசிடிவி காட்சியில் பதிவானவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மர்ம நபர்கள் சிசிடிவி கேமராவிற்கு தைரியமாக முத்தம் கொடுத்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.