சிசிடிவி கேமரா வை மறந்து சூப்பர் மார்க்கெட்டில் திருடிய பெண்
காஞ்சிபுரத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பெண் ஒருவர் திருடி மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் சாலை பகுதியில் ஓர் தனியார் சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு நேற்று பிற்பகல் பெண்மணி ஒருவர் தனது 20வயது மதிக்கதக்க மகளுடன் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வந்துள்ளார்.
அங்கு தனக்கு தேவையான பொருட்களை வாங்கிய அவர் சில பொருள்களை தனது உடம்பில் மறைத்ததாக கூறப்படுகிறது. மேலும் காசாளர் பகுதிக்கு வந்து மறைத்து வைத்த பொருட்களை தவிர மற்ற பொருட்களுக்கான ரசீது போட கொடுத்துள்ளார்.
இதை கவனித்த கடை ஊழியர் அப்பெண்ணிடம் விசாரிக்க திருடிய பொருட்களை மீண்டும் அதே இடத்திலேயே கொண்டு போய் வைக்க அவர் முயன்றுள்ளார்.
இதனை அடுத்து அவரிடம் இருந்த அனைத்து பொருட்களையும் வாங்கி வைத்துக் கொண்டு அப்பெண்ணை கடை உரிமையாளர்கள் எச்சரித்து அனுப்பினர். இதன் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த வெடிபொருள்! ஈஸ்டர் வழக்கில் ஜமைக்காவில் இருந்து வழங்கப்பட்ட சாட்சியம் IBC Tamil