16 வருட காத்திருப்பு - 3 மாதத்தில் முடியப்போகிறது!! சென்னை தாம்பரம் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி
சென்னை தாம்பரம் - வேளச்சேரி ரயில் வழித்தடத்தின் பணிகள் இன்னும் 3 மாதத்தில் முடிவடையவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ரயில் வழித்தடம்
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய தீர்வாக இருந்து வருவது ரயில் போக்குவரத்து. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் இச்சேவை ஒரு வரப்பிரசாதமே.
அப்படி இருக்கும் நிலையில் மாநகரின் பல இடங்களில் இன்னும் ரயில் சேவைகள் நீடிக்கப்படவேண்டும் என்றும், சில இடங்களில் நிறுத்தப்பட்ட சேவைகள் மீண்டும் துவங்கப்பட வேண்டும் என பல வலியுறுத்தல்கள் இருந்து வருகின்றன.
அப்படி சென்னையின் முக்கிய பகுதிகளான சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயிலை சேவையை பரங்கிமலை வரை நீட்டிக்க வேண்டுமென்ற திட்டம் 2007ம் ஆண்டில் துவங்கியது. வேளச்சேரியில் இருந்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் வழியாக பரங்கிமலை ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், 5 கி.மீ.க்கு இந்த திட்டம் வரையறுக்கப்பட்டது.
இதில், 4.5 கீ.மி பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளாகவே நில பிரச்சனை காரணமாக, இப்பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன.
நீதிமன்ற தலையீட்டிற்கு பிறகு இதில் ஒரு முடிவு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இன்னும் 3 மாதங்களில் பணிகள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.