CSK ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி: வைரலாகும் டோனியின் வீடியோ

Dhoni csk ipl happy fan
By Jon Mar 25, 2021 03:09 PM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை கேப்டன் டோனி வெளியிட்ட வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அணி வீரர்கள் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். முதல் போட்டியாக டெல்லி கேபிட்டலை ஏப்ரல் 10ம் தேதி எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இந்தாண்டு வெறித்தனமாக விளையாட சென்னை வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்களாம். இந்நிலையில் சென்னை அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய டோனி, சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரிய விசில் அடிங்க என்றார்.

இந்த வீடியோ டுவிட்டரில் வெளியிட, சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.