16 வருட CSK வரலாறு - இது வரை நிகழாத சாதனை நிகழ்த்திய சென்னை அணி

MS Dhoni Ruturaj Gaikwad Chennai Super Kings IPL 2024
By Karthick Apr 24, 2024 01:48 AM GMT
Report

சென்னை அணி நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

211 ரன் குவிப்பு

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ராகுல் பௌலிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் ஓப்பனராக கேப்டன் ருதுராஜ் மற்றும் ரஹானே களமிறங்கினர்.

chennai-super-kings-16-years-record-in-ipl

ரஹானே 1 ரன்னிலும், டெரி மிச்சேல் 11 ரன்களிலும், ஜடேஜா 16 ரன்னிலும் வெளியேறினர். இருப்பினும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ருதுராஜ் துபேவுடன் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டார். ருதுராஜ் சதம் விளாசிய நிலையில், மறுமுனையில் துபே அரை சதம் விளாசினார்.

chennai-super-kings-16-years-record-in-ipl

கடைசி ஓவரில் ரன் அவுட்டான துபே 27 பந்துகளில் 7 சிக்ஸ், 3 ஃபோர்களுடன் 66 ரன்களை விளாசினார். இறுதி வரை அவுட்டாகாத கேப்டன் ருதுராஜ் 60 பந்துகளில் 3 சிக்ஸ்,12 ஃபோர்களுடன் 108 ரன்களை குவித்தார். தோனி 4 ரன்களுடன் களத்தில் இருந்தார். 20 ஓவர்களில் சென்னை அணி 210/4 ரன்களை குவித்தது.

Impact Player போல - பௌலர்களுக்காக அறிமுகமாகும் புதிய விதி - பேட்டர்களுக்கு நெருக்கடி தான்!

Impact Player போல - பௌலர்களுக்காக அறிமுகமாகும் புதிய விதி - பேட்டர்களுக்கு நெருக்கடி தான்!

16 வருட வரலாற்றில்  

பெரிய இலக்கை நோக்கி லக்னோ அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் கேப்டன் ராகுல் களமிறங்கினர். ஆரம்பமே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டி காக் 0(3), ராகுல் 16(14), படிக்கல் 13(19) ரன்களில் வெளியேறிய நிலையில், மறுமுனையில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் தனி ஆளாக அணியை மீட்டார்.

chennai-super-kings-16-years-record-in-ipl

இறுதி வரை அவுட்டாகாமல் இருந்த அவர் 63 பந்துகளில் 124 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு வழி வகை செய்தார். 19.3 ஓவர்களில் 213/4 ரன்களை எடுத்து லக்னோ அணி வெற்றியை பதிவு செய்தது. தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் லக்னோ அணி, சென்னையை வீழ்த்தியுள்ளது.

chennai-super-kings-16-years-record-in-ipl

இந்த போட்டியில் சென்னை அணி தரப்பில் பெரும் சாதனை ஒன்று நிகழ்ந்துள்ளது. சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனி இது வரை ஒரு சதம் கூட விளாசியதில்லை. 16 வருட சென்னை அணியில் தொடர்ந்த இந்த சோகத்திற்கு நேற்று ருதுராஜ் முடிவுரை எழுதினார். சென்னை அணி 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வியுடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.