சென்னை புறநகர் ரயிலிலும் இனி ஏசி பேட்டிகள்.டிக்கெட் விலை தெரியுமா?
சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பேட்டிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புறநகர் ரயில்
ரயில் பயணம் பலரின் தினசரி வாழ்வில் இன்றியமைத்த ஒன்றாக மாறியுள்ளது. சென்னையின் புறநகர் அடுத்த செங்கல்பட்டில் இருந்தும் அரக்கோணத்தில் இருந்தும் பல தரப்பட்ட மக்கள் நாள் தோறும் புறநகர் ரயில்களின் மூலம் சென்னை வந்து பணிபுரிகிறார்கள்.
அதே நேரத்தில் அரசிற்க்கும் இது முக்கிய வருவாயாக இருக்கிறது. மக்களின் நல்லதொரு பயணத்தை எளிதாக்க பல வகையிலான முயற்சிகளை ரயில்வே துறையும் முன்னெடுத்து வருகிறது.
ஏசி பெட்டிகள்...
அப்படி ஒரு செய்தி தான் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை செல்லும் ரயில்களில் ஏசி பேட்டிகளை இணைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரயில்வே வாரியம் இதற்காக தெற்கு ரயில்வேக்கு 12 பெட்டிகள் கொண்ட 2 குளிரூட்டப்பட்ட மின் மோட்டார் யூனிட்டுகளை ஒதுக்கி இருப்பதாக வீட்டு வசதித்துறை கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தற்போதே கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், ரயிலின் டிக்கெட் எப்படி இருக்கும் என்ற எந்த தகவலும் இல்லை.