திடீரென மயங்கி விழுந்த மாணவர்கள்.. பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவு - அதிர்ச்சி சம்பவம்!
வாயு கசிவினால் பள்ளி மாணவர்கள் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில்..
சென்னை திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வந்துள்ளது. அங்கு வாயு கசிவு ஏற்பட்டதாக புகார் வெளியாகியுள்ளது. பள்ளியில் திடீரென வாயு நெடி வீசியதால், மாணவ- மாணவிகள் அவசரமாக வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதில், மாணவர்கள் சிலர் மயக்கம் அடைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மயக்கமடைந்த 3 மாணவிகள் உடனே அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
வாயு கசிவு
பள்ளியில் இருந்து மாணவர்களை வெளியேற்றப்பட்டதால், குழந்தைகளை அழைத்து செல்ல பள்ளி முன்பு பெற்றோர்கள் குவிந்துள்ளனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, அருகே உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வாயு வெளியேறியதா ? அல்லது பள்ளியில் உள்ள ஆய்வு கூடத்தில் இருந்து வாயு வெளியேறியதா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடந்த்தி வருகின்றனர்.