ஆவின் நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவு : அவசரமாக வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்

By Irumporai Jun 29, 2023 09:28 AM GMT
Report

புதுக்கோட்டையில் ஆவின் நிறுவனத்தில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 வாயு கசிவு

புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆவின் ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றபட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் வாயுக் கசிவை நிறுத்த போராடி வருகின்றனர்.

ஆவின் நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவு : அவசரமாக வெளியேற்றப்பட்ட ஊழியர்கள் | Pudukottai Aavins Company Gas Leak

 பதட்டத்தில் பொதுமக்கள்

இந்த வாயு கசிவால் அங்கு வேலை பார்த்த ஊழியர்களுக்கு திடீரென கண் எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் போன்ற பிரச்னை ஏற்பட்டதால், அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

தொடர்ந்து அதிகாரிகள் வாயு கசிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது அம்மோனியா வாயு கசிவு நிறுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் தகவல் அளித்துள்ளனர்.