Saturday, Jul 19, 2025

பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை தான்; லிஸ்ட்டில் அடுத்து எந்த ஊரு தெரியுமா?

Chennai India Bengaluru trichy
By Sumathi 2 years ago
Report

பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பு

பன்முகத்தன்மை ஆலோசனை நிறுவனமான அவதார் குழுமம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் (TCWI) பட்டியலை வெளியிட்டுள்ளது.

trichy

113 நகரங்களில், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ஒரு பிரிவாகவும், 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களை இரண்டாவது பிரிவாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பெண்களுக்கு பாதுகாப்பான இடம் கைலாசா தான் - நடிகை ரஞ்சிதா பரபர தகவல்!

பெண்களுக்கு பாதுகாப்பான இடம் கைலாசா தான் - நடிகை ரஞ்சிதா பரபர தகவல்!

பட்டியல் வெளியீடு

முதல் பட்டியலில், பெண்களின் வேலைவாய்ப்பிற்கு மிகவும் உகந்த சூழலையும், பாதுகாப்பையும் உருவாக்கும் நகரங்களின் பட்டியலில் சென்னை முதல் இடத்தில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பெங்களூர், புனே, மும்பை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்கள் உள்ளன.

bengaluru

இரண்டாவது பட்டியலில் திருச்சிராப்பள்ளி முதலிடத்தையும், வேலூர், கொச்சி, திருவனந்தபுரம், சிம்லா ஆகியவை அடுத்த மூன்று இடங்களையும் பிடித்திருக்கின்றன.

இதில், முதல் 10 நகரங்களின் பட்டியலில் தென் மாநிலங்கள் 8 இடங்களை பிடித்திருக்கிறது. சட்டம் ஒழுங்கு, அரசு மீது மக்களின் நம்பிக்கை, முற்போக்கு கலாச்சாரம் போன்றவைதான் இந்த முன்னேற்றத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.