இனி இப்படியும் சென்னையை ரசிக்கலாம் - 12 ஆண்டுகளுப்பின் டவர் திறப்பு!

Chennai
By Sumathi Mar 20, 2023 06:34 AM GMT
Report

12 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா நகர் பூங்கா மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது.

அண்ணா நகர் பூங்கா:

அண்ணா நகர் பூங்கா (அ) டாக்டர் விஸ்வேஸ்வரய்யா பூங்கா எனப்படும் இந்த இடம் அண்ணா நகர் மண்டலத்தில் 15.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது .சென்னை வாசிகளின் முக்கிய பொழுது போக்கு இடமாக விளங்கி வருகிறது. இங்கு உள்ள' டவர் ' 138 அடி உயரம் உடையது. இக்கோபுரம் 1968 ஆண்டு முதல் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இனி இப்படியும் சென்னையை ரசிக்கலாம் - 12 ஆண்டுகளுப்பின் டவர் திறப்பு! | Chennai S Anna Nagar Tower Park Reopen

அன்றைய கால கட்டத்தில், இந்த கோபுரத்தின் வாயிலாக, மத்திய சென்னை முழுவதும் பார்க்க முடிந்தது. இந்நிலையில், கோபுரத்தின் மீது காதல் ஜோடிகள் ஏறி தற்கொலை செய்து கொள்வது அதிகரித்ததால், 2011 ல் கோபுரத்தின் மீது பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

மறுசீரமைப்பு:

இந்நிலையில், பொது மக்களின் தொடர் கோரிக்கையையடுத்து, கோபுரத்தில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்த மாநகராட்சி திட்டமிட்டது . இதையடுத்து, ரூ 89 லட்சம் மதிப்பில் டவர் மற்றும் பூங்கா சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளபட்டன.

இதனை தலைமை செயலர் இறையன்பு கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டார் , தொடர்ந்து, பூங்காவின் சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், அமைச்சர் நேரு இன்று திறந்து வைக்க உள்ளார். இது 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.