சென்னை ராயப்பேட்டையில் - 14 ஏக்கரில்..!!இன்னும் மன்னர் வாழ்ந்து வரும் அரண்மனை தெரியுமா உங்களுக்கு?
அரச குடும்பங்கள் இன்றும் மக்களுக்கு ஆச்சரியப்படும் விஷயமாகவே அமைந்துள்ளது.
மன்னர்கள்
நாடு சுதந்திரம் பெற்ற போது, பல சிறு குறு அரச குடும்பங்களும் தங்களின் அதிகாரங்களை விடுத்தது குடியரசுக்கு கீழ் வந்தன. இருப்பினும் நாட்டின் பல இடங்களிலும் ஜாமீன்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.
பழைய அரண்மனைகள் அவர்களிடம் இன்னும் அப்படியே தான் இருக்கின்றன. அப்படி சென்னையில் அரச குடும்பம் ஒன்று இன்னும் தங்களது அரண்மனையில் வாழ்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா? அதுவும் சென்னை ராயப்பேட்டையில் தான் இருக்கிறார்கள் என்றால்.
ஆற்காடு நவாப்
ஆற்காடு நவாப் குறித்து பலரும் அறிந்திருப்பீர்கள். அவர்களின் ஆட்சிக்கு கீழ் சென்னையின் சில பகுதிகள் இருந்தன. 1768 ஆம் ஆண்டு முதல் 1855 ஆம் ஆண்டு வரை ஆற்காடு நவாப் சென்னை சேப்பாக்கத்தில் இருந்த அரண்மனையில் தான் வசித்து வந்தார்.
நவாப்பின் ஆட்சியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பிறகு, திருவல்லிக்கேணி ஷாதி மஹால் இடத்தில் நவாப்பின் குடும்பம் வாழ்ந்தனர்.
ஆங்கிலேயர்களுடன் ஆற்காடு நவாப் நல்லுறவில் இருந்ததன் காரணமாக, ஆங்கிலேயர்கள் ராயபேட்டையில் 14 ஏக்கர் நிலப்பரப்பில் அமீர் மஹால் என்ற பெரிய அரண்மனையை அவர்களுக்கு அளித்தனர்.
முகமது அப்துல் அலி நவாப் தற்போது நவாப் வாரிசாக உள்ளார். அப்படி, அமீர் மகாலுக்கு அவர்கள் இடம்பெயர்ந்த பிறகு, சேப்பாக்கம் அரண்மனை தமிழ்நாடு அரசின் அலுவலகமாக இருந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.