இளைஞரைக் கொன்று இன்ஸ்டாகிராமில் Reel பதிவிட்ட சம்பவம் -பகீர் பின்னணி!
இளைஞரைக் கொன்று இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ்' பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் எட்வின். இவருக்குத் திருமணமாகி பூங்கொடி என்ற மனைவியும், சின்ன ராபர்ட், ஜோசப், மோசஸ் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். சின்ன ராபர்ட் A கேட்டகிரி ரவுடியாக உள்ளார். மேலும் சின்ன ராபர்ட்டுக்குத் திருநங்கை ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு வாடகை வீட்டில் வசித்துள்ளார்.
இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 16 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு தெருவில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் மூகமுடி அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் சின்ன ராபர்டைவெட்டி படுகொலை செய்து அங்கிருந்து தப்பித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா நகர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சின்ன ராபர்ட் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இன்ஸ்டா ரீல்ஸ்
இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் தலைமறைவாக உள்ள அந்த கும்பலைத் தேடி வருகிறனர்.
இந்நிலையில் அந்த கொலைக் கும்பலானது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராபர்ட்டைக் கொலை செய்தது குறித்து ஒரு பதிவை வெளியிட்டு போட்டோவையும் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.