வெளுத்து வாங்கும் மழை; இந்த மாவட்டங்களிலெல்லாம் பள்ளிகள் செயல்படுமா? ஆட்சியர் அறிவிப்பு!
மழை பெய்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
மிதமான மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
பள்ளிகள் செயல்படும்
அதன்படி, வேலூரில் கனமழை பெய்து வருவதால் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் கோயம்பேடு, வடபழனி, கிண்டி, நெற்குன்றம், அம்பத்தூர், ஆலந்தூர், தாம்பரம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரத்தில் செய்யார், வெம்பாக்கம், மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
ஆனால் மிதமான மழையே பெய்து வருவதால் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.