அடுத்த 3 மணி நேரம் ...10 மாவட்டங்களில் கனமழை....வானிலை ஆய்வு மையம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் மழை பெய்து வரும் சூழலில், அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரவு முதல் மழை
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்த வரை மாலை நேரத்தில் இடி மின்னலோடு மழை பெய்தது. மயிலாப்பூர், பட்டினம்பாக்கம், காமராஜர் சாலை, அண்ணாசாலை, ஆழ்வார்பேட்டை, வடபழனி, பெரம்பூர் போன்ற பகுதிகளில் இரவு தொடங்கிய மழை அதிகாலையில் வரை தொடர்ந்து பெய்தது.
இதனால் காலையிலேயே வானிலை குளிருடன் காணப்படுகிறது. சென்னையின் பல இடங்களிலும் மழையின் காரணமாக பல்வேறு தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. விடுமுறை தினம் என்பதால் சாலையில் பெரிதாக போக்குவரத்து நெரிசல் இல்லை.
வானிலை மையம் தகவல்
இந்நிலையில் இந்த மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நேற்று முதல் வரும் செப்டம்பர் 1-ந்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இந்த கனமழை அடுத்த 3 மணி நேரத்திற்கு தொடர வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.