சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்; அடுத்த 5 நாட்களுக்கு சம்பவம் இருக்கு - வெதர்மேன் எச்சரிக்கை!
இன்று முதல் மூன்று தினங்களுக்கு மிக கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு அலர்ட்
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாற உள்ளது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் என்று பெயரிடப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று இலங்கை கடற்கரையை தொட்டபடி தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரக்கூடும். எனவே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மூன்று நாள்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4-5 நாட்களுக்கு மழை
இந்த மாவட்டங்களில் 12 முதல் 20 செ.மீ மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மழை குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில்,
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று தொடங்கி அடுத்த 4-5 நாட்களுக்கு நல்ல மழை பொழிவு இருக்கும். டெல்டா மாவட்டங்கள் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சை மற்றும் ராமநாதபுரத்தின் சில பகுதிகளுக்கு பெரிய நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.