சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத்; ரயில் கட்டணம் இதுதான்.. இதோ முழு விவரம்!

Chennai Indian Railways Tirunelveli
By Sumathi Aug 31, 2024 05:43 AM GMT
Report

சென்னை - நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது.

வந்தே பாரத்

சென்னை - நாகர்கோவில் இடையே வாரத்தில் 6 நாட்கள் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி காணொலிக்காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார். இதற்கிடையில் இந்த ரயில் இயக்கப்படும் நேரம், வழித்தடம் கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகியுள்ளன.

vande bharath

சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு இந்த ரயில் புறப்படும். தாம்பரத்திற்கு 5.23 மணிக்கு சென்று சேரும். 2 நிமிடங்கள் தாம்பரத்தில் நிற்கும் இந்த ரயில் 5.25 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு விழுப்புரம் (6.52/6.55 - வரும் நேரம் / புறப்படும் நேரம்) , திருச்சி (8.55 / 9.00), திண்டுக்கல் (9.53 / 9.55), மதுரை (10.38 / 10.40), கோவில் பட்டி (11.35 / 11.37), நெல்லை (12.30 / 12.32) வழியாக நாகர் கோவிலுக்கு பிற்பகல் 1.50 மணிக்கு வந்து சேரும்.

[YUYBPU2

சென்னை - நாகர்கோவில்

மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நெல்லை (3.18/3.20), கோவில் பட்டி (3.58/4.00), மதுரை (5.03/5.05), திண்டுக்கல் (5.48/5.50), திருச்சி (6.45/6.50), விழுப்புரம் (8.53/8.55), தாம்பரம் (10.28/10.30) வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு இரவு 11 மணிக்கு வந்து சேரும். இந்த ரயில் 16 பெட்டிகளை கொண்டுள்ளது.  

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத்; ரயில் கட்டணம் இதுதான்.. இதோ முழு விவரம்! | Chennai Nagercoil Vande Bharat Train Full Details

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் (சேர்கார் கட்டணம் - ரூ.1760), (எக்சிகியூட்டிவ் சேர்கார் கட்டணம் ரூ.3240)  சென்னை எழும்பூர் - நெல்லை (சே.க - ரூ.1665), (எ.சே.க - ரூ.3055)  எழும்பூர் - கோவில்பட்டி (சே.க - ரூ.1350) - (எ.சே.க. - ரூ.2620) எழும்பூர் - மதுரை (சே.க - ரூ.1,200) - (எ.சே.க. - ரூ.2,295)  எழும்பூர் - திண்டுக்கல் (சே.க - ரூ.1105) - (எ.சே.க. - ரூ.2110)  எழும்பூர் - திருச்சி (சே.க - ரூ.955) - (எ.சே.க. - ரூ.1790)  எழும்பூர் - விழுப்புரம் (சே.க - ரூ.545) - (எ.சே.க. - ரூ.1,055)  எழும்பூர் - தாம்பரம் (சே.க - ரூ.380) - (எ.சே.க. - ரூ.705) 

நாகர்கோவில் - எழும்பூர் (சே.க - ரூ.1735) - (எ.சே.க. - ரூ.3220)  நாகர்கோவில் - தாம்பரம் (சே.க - ரூ.1700) - (எ.சே.க. - ரூ.3175)  நாகர்கோவில் - விழுப்புரம் (சே.க - ரூ.1510) - (எ.சே.க. - ரூ.2775)  நாகர்கோவில் - திருச்சி (சே.க - ரூ.1000) - (எ.சே.க. - ரூ.1945)  நாகர்கோவில் - திண்டுக்கல் (சே.க - ரூ.850) - (எ.சே.க. - ரூ.1635)  நாகர்கோவில் - மதுரை (சே.க - ரூ.1735) - (எ.சே.க. - ரூ.1405)  நாகர்கோவில் - கோவில்பட்டி (சே.க - ரூ.515) - (எ.சே.க. - ரூ.985)  நாகர்கோவில் - நெல்லை (சே.க - ரூ.440) - (எ.சே.க. - ரூ.830) உணவுடன் சேர்த்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.